அக்.13,2015. ஆப்ரிக்கக் கண்டத்தில் இடம்பெறும் அனைத்துச் சண்டைகளையும் 2020ம் ஆண்டுக்குள் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உறுதியளித்துள்ளது ஆப்ரிக்க ஒன்றியம்.
ஆப்ரிக்காவில் 2020ம் ஆண்டுக்குள் துப்பாக்கிச் சப்தங்கள் கேட்காமல் இருப்பதற்கு முயற்சிகள் எடுப்பதற்கு ஆப்ரிக்க ஒன்றியம் தன்னை அர்ப்பணித்துள்ளது என்று, நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் அறிவித்தார், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த மூத்த அதிகாரி Daniel Yifru Sentayehu.
ஆப்ரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஒருங்கிணைப்புக்கும் அக்கண்டத்தில் இடம்பெறும் சண்டைகள் பெரும் தடையாக இருக்கின்றன என்றும் கூறினார் Sentayehu.
தென் சூடானிலுள்ள ஐ.நா. அமைதி காக்கும் அமைப்பில் சரணடைந்த அந்நாட்டு மக்கள் ஒப்படைத்த ஆயுதங்களை, அந்த அமைப்பும், ஐ.நா. கண்ணிவெடிகள் தகர்ப்பு அமைப்பும் இணைந்து அழித்து வருகின்றன.
ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |