அக்.09,2015. குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் நான்காவது பொது அமர்வு இவ்வெள்ளி காலை 9 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரசன்னத்தில் ஆரம்பித்தது.
கடந்த செவ்வாய் முதல் இவ்வியாழன் வரை, மொழிவாரியாக, 13 சிறிய குழுக்களில் விவாதிக்கப்பட்டவை குறித்த அறிக்கைகள் 4வது பொது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டன.
மேலும், இம்மாமன்றத்தில் முதல் மூன்று பொது அமர்வுகளில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படையில், இம்மாமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கென தயாரிக்கப்பட்டிருந்த தொகுப்பின்(Instrumentum Laboris) முதல் பகுதி பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
மேலும், இம்மாமன்றத்தின் நான்காவது பொது அமர்வு பற்றி நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில், மனிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே, Louisville பேராயர் Joseph E. Kurtz, மத்ரித் பேராயர் Carlos Osoro Sierra ஆகியோர் அருள்பணி லொம்பார்தி அவர்களுடன் தகவல்களை வழங்கினர்.
வாழ்வதற்கான உரிமை குறித்த திருஅவையின் போதனைகளை இம்மூன்று மாமன்றத் தந்தையருமே உறுதி செய்தனர். மேலும், எதிர்பாராதவிதமாக கருவுறும் பெண்கள் வாழும் குடும்பங்களுக்கு மேய்ப்புப்பணி உதவிகள் அவசியம் என்றும் இத்தந்தையர் கூறினர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |