2015-10-07 16:58:00

இலங்கையில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் மக்களிடம்


அக்.07,2015. இலங்கை உள்நாட்டுப் போரின்போது, அந்நாட்டு இராணுவம், வட பகுதியில் ஆக்ரமித்துக்கொண்ட 600 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட நிலத்தை, இலங்கை அரசுத் தலைவர், மைத்திரிபால சிறிசேன அவர்கள் மீண்டும் அந்நிலங்களின் உரிமையாளர்களுக்கு வழங்கினார் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இலங்கையில் உள்ள ஒவ்வோரு அங்குல நிலத்தையும் உழுது பயிரிட்டால், நாட்டில் நிலவும் வறுமையை நீக்க முடியும் என்று, அரசுத் தலைவர் சிறிசேன அவர்கள், இந்நிலங்களை வழங்கிய விழாவில் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணமடு என்ற இடத்தில், இத்திங்களன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில், இராணுவம் அபகரித்துக் கொண்ட 613 ஏக்கர் நிலத்தை, உரிமையாளர்களுக்கு அரசுத் தலைவர் வழங்கினார் என்று ஆசிய செய்திக் குறிப்பு கூறுகிறது.

அபகரிக்கப்பட்ட நிலங்களால், நாட்டில் விவசாயம் குறைந்துவிட்டது என்றும், 2014ம் ஆண்டு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பயிர்களின் விலை, 38 மில்லியன் யூரோக்கள் என்றும், அரசுத் தலைவர் சிறிசேன அவர்கள் சுட்டிக்காட்டினார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.