2015-10-06 16:49:00

விவிலியத்தின் செய்தி அன்பு,கருணை-உதவி குடியரசுத் தலைவர்


அக்.06,2015. விவிலியத்தின் முக்கிய செய்தி அன்பு மற்றும் கருணையாக உள்ளது, இது அனைத்து மத மரபுகளிலும் இழையோடுகின்றது என்று இந்திய உதவி குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி அவர்கள் கூறினார்.

டெல்லி மறைமாவட்டத்தின் மீட்புப் பேராலயத்தில், தெற்காசிய விவிலிய விளக்கம்(SABC) என்ற தலைப்பில், விவிலியம் அனைத்துக்கும் விளக்கவுரை அடங்கிய நூலை வெளியிட்டு உரையாற்றிய அன்சாரி அவர்கள் இவ்வாறு கூறினார்.

உலகில் புனிதமிக்க நூல்களில் ஒன்றான விவிலியத்தின் விளக்கவுரை ஒன்றை  வெளியிடுவதில் தான் மகிழ்வதாகத் தெரிவித்த அன்சாரி அவர்கள், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளின் 90க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் இந்த நூல் உருவாக உதவியுள்ளனர் என்றும் கூறினார்.

SABC என்ற இந்த நூலை எழுதுவதற்கு எட்டு ஆண்டுகள் ஆகியதாகச் சொல்லப்படுகின்றது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில், ராஜ்ய சபா உறுப்பினர் ஜே.டி.சீலம், SABCன் முதன்மை ஆசிரியர் Brian Wintle உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : PTI /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.