2015-10-06 17:00:00

உலக குடியிருப்பு தினம் அக்டோபர் முதல் திங்கள்


அக்.06,2015. ஏழைகளுக்கும், சமுதாயத்தில் நலிவடைந்த மக்களுக்கும் பொதுவான இடங்கள் மிகவும் முக்கியம் என்று, உலக குடியிருப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்ட இத்திங்களன்று ஐ.நா. கூறியுள்ளது.

இந்நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், மக்கள் ஒருவர் ஒருவரோடு தொடர்பு கொள்ளவும், ஒத்துழைக்கவும் நல்ல தரமான இடங்கள் அவசியம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இலங்கையில் ஏறக்குறைய 12 இலட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் தேவை என அந்நாட்டு தேசிய வீடமைப்பு அதிகார அவை, ​இந்த உலக நாளன்று தெரிவித்துள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 50 இலட்சம் வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார அவைத் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்தார்.

அக்டோபர் மாதத்தின் முதல் திங்கள்கிழமையை உலக குடியிருப்பு தினமாக கடைப்பிடிப்பதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை 1986ம் ஆண்டில் தீர்மானித்தது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.