2015-10-05 17:13:00

தேவை 1 கோடி ஆசிரியர்கள் : யுனெஸ்கோ தகவல்


அக்.05,2015. 2020ம் ஆண்டிற்குள் உலகின் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி கிடைக்க வேண்டுமென்றால், 1 கோடியே 10 இலட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுவதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.

அனைத்துலக அளவில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வியை அளிக்க வேண்டும் என்பதே, அனைத்துலக ஆசிரியர்கள் தினத்தில் எடுத்திருக்கும் தீர்மானம் என்று தெரிவித்துள்ள யுனெஸ்கோ அமைப்பு, பல நாடுகளில் குழந்தைகள் ஆரம்பக் கல்வி பெறாமல் அதிகம் துன்புறுவதால், அவர்களின் வாழ்க்கைத்தரம் மட்டுமல்லாது அவர்களது எதிர்காலமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், குறைந்த பயிற்சி, குறைவான ஊழியர்கள் மற்றும் அதற்கேற்ற நிதி ஒதுக்கீடு செய்யாததன் காரணத்தினாலேயே குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கவலையை வெளியிட்டுள்ளது.

அனைத்துலக ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 05ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அமைப்பு, இந்த ஆண்டை, குழந்தைப் பருவ கல்வி ஆண்டாக கொண்டாட தீர்மானித்துள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.