2015-10-05 16:28:00

33 விழுக்காட்டு இந்திய இளைஞர்களுக்கு இரத்த அழுத்தம்


அக்.05,2015. இந்திய இளைஞர்களுள் மூன்றில் ஒருவருக்கு இரத்த அழுத்த நோய் உள்ளதாகவும், அவர்களுக்குத் தெரியாமலேயே நோயில் சிக்கி உள்ளனர் என்றும் அண்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

'கார்டியாலஜி சொசைட்டி ஆப் இந்தியா' என்ற அமைப்பு, நாடு முழுவதும் இளைஞர்களிடம் நடத்திய ஓர் ஆய்வின் வழியாக, இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

சிகரெட் புகைக்காத, மது அருந்தாத பல இளைஞர்களுக்கு இரத்த அழுத்த நோய் இருப்பதற்கு, அவர்களது வாழ்க்கை முறையே காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

உணவுப் பழக்கம், இரவு கண்விழிப்பு, பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவைகள், இக்கால இளைஞர்களிடையே இரத்த அழுத்த நோய்க்கு முக்கிய காரணங்கள் எனக் கூறும் இந்த ஆய்வு,  இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டோரில் மூன்றில் 2 பகுதியினருக்கு, அந்த நோய் வந்ததே தெரியவில்லை, எனவும் கூறுகிறது.

“இரத்த அழுத்த நோய் வந்தவர்களை இதய நோய் எளிதாக தாக்கும் அபாயம் உள்ளது'' என்றும் இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.