2015-10-03 16:25:00

உரோமையில் எண்பது பங்குகள் புலம்பெயர்ந்தோரை ஏற்கின்றன


அக்.03,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் உரோம் நகரில் பங்குத்தளங்கள், துறவற நிறுவனங்கள், குருத்துவக் கல்லூரிகள், குடும்பங்கள்,  என எண்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் புலம்பெயர்ந்தோரை ஏற்பதற்கு இசைவு தெரிவித்துள்ளன.

இதனை அறிவித்த உரோம் மறைமாவட்ட காரித்தாஸ் இயக்குனர் பேரருள்திரு என்ரிக்கோ ஃபெரோச்சி அவர்கள், 62 பங்குத்தளங்கள், 13 துறவு நிறுவனங்கள், 2 குருத்துவக் கல்லூரிகள், 2 குடும்பங்கள்  என எண்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் புலம்பெயர்ந்தோரை ஏற்பதற்கு இசைவு தெரிவித்துள்ளன என்று கூறினார்.

பொருளாதார மற்றும் பிற வழிகளில் புலம்பெயர்ந்தோரை ஆதரிப்பதற்கு முன்வந்துள்ள இந்த எண்ணிக்கை வரும் நாள்களில் அதிகரிக்கும் என்றும், உரோம் காரித்தாஸ்  நிறுவனம் 2016ம் ஆண்டிலும் இந்நடவடிக்கையை ஊக்குவிக்கும் என்றும் கூறினார் பேரருள்திரு ஃபெரோச்சி. ஐரோப்பாவில் ஒவ்வொரு மறைமாவட்டமும், துறவு நிறுவனங்களும், பங்குகளும் பலம்பெயர்ந்தோர் குடும்பம் ஒன்றை ஏற்குமாறு திருத்தந்தை ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.