2015-10-02 16:00:00

14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் 270 மாமன்றத் தந்தையர்கள்


அக்.02,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று ஆரம்பித்து வைக்கும் 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில், 270 மாமன்றத் தந்தையர்கள் கலந்து கொள்வார்கள் என்று பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறினார் கர்தினால் பால்திச்சேரி.

குடும்பம் குறித்த இந்த ஆயர்கள் மாமன்றம் பற்றி விளக்கிய கர்தினால் பால்திச்சேரி அவர்கள், 74 கர்தினால்கள், 6 முதுபெரும் தந்தையர், உயர் பேராயர் ஒருவர், 72 பேராயர்கள், 102 ஆயர்கள், 2 பங்குத் தந்தையர் மற்றும் 13 துறவற சபையினர் என 270 மாமன்றத் தந்தையர்கள் உள்ளனர் என்று கூறினார்.

இந்த 270 பேரில் திருஅவையில் பொறுப்பு காரணமாக 42 பேர், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 183 பேர், திருத்தந்தையால் நியமிக்கப்பட்டவர்கள் 45 பேர் என்றும், இவர்களில் 54 பேர் ஆப்ரிக்காவையும், 64 பேர் அமெரிக்காவையும், 36 பேர் ஆசியாவையும், 107 பேர் ஐரோப்பாவையும், 9 பேர் ஓசியானியாவையும் சேர்ந்தவர்கள் என்றும் விளக்கினார் கர்தினால் பால்திச்சேரி.

திருஅவையிலும், உலகிலும் குடும்பத்தின் அழைப்பும், பணியும் என்ற தலைப்பில் 14வது உலக ஆயர்கள் மாமன்றம் அக்டோபர் 4ம் தேதி வத்திக்கானில் தொடங்குகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.