2015-10-01 16:27:00

மேலும் பன்னிருவரை புனிதராக்கும் வழிமுறை ஆரம்பம்


அக்.01,2015. புனிதர் மற்றும் முத்திப்பேறு பெற்ற நிலைகளுக்கு உயர்த்துவதற்கென ஐந்து மறைசாட்சிகள், ஏழு இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு குறித்த விபரங்களை திருப்பீட புனிதர் பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள் இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பித்தார்.

இஸ்பெயினின் Suancesவுக்கு அருகில் 1937ம் ஆண்டு சனவரி 15ம் தேதி விசுவாசத்திற்காகக் கொலை செய்யப்பட்ட மறைசாட்சிகளான, அருள்பணியாளர் Valentino Palencia Marquina மற்றும் அவரோடு சேர்ந்த நால்வரின் வீரத்துவமான வாழ்வு குறித்த விபரங்களை ஏற்றுள்ளார் திருத்தந்தை.

இன்னும், இத்தாலி, ஜெர்மனி, இஸ்பெயின் மற்றும் மெக்சிகோ நாடுகளின் அருள்பணியாளர்கள் Giovanni Folci, Francesco Blachnicki, Giuseppe Rivera Ramírez, Giovanni Emanuele Martín del Camp, உலக மீட்பர் துறவு சபையின் அருள்பணியாளர் Antonio Filomeno Maria Losito, அருள்சகோதரி Maria Benedetta Giuseppa Frey, புனித பெனடிக்ட் ஊர்சுலைன் தியாகிகள் சபையின் பொதுநிலை விசுவாசி Anna Chrzanowska ஆகிய ஏழு இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு குறித்த விபரங்களையும் ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை.

இறைக் கைதி பணி அமைப்பை உருவாக்கிய அருள்பணி Giovanni Folci அவர்கள், Cagnoல் (இத்தாலி) 1890ம் ஆண்டு பிறந்து 1963ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி இறைபதம் சேர்ந்தார். அருள்பணி Francesco Blachnicki அவர்கள், Rybnik (போலந்து )ல் 1921ம் ஆண்டு பிறந்து 1987ம் ஆண்டு பிப்ரவரி 27ல் Carlsberg(ஜெர்மனி)ல் இறந்தார். அருள்பணி Giuseppe Rivera Ramírez அவர்கள், 1925ல் Toledo (இஸ்பெயின்)ல் பிறந்து 1991ல் இறந்தார். அருள்பணி Giovanni Emanuele Martín del Campo அவர்கள், 1917ல் Moreno (மெக்சிகோ)ல் பிறந்து 1996ல் இறந்தார்.  அருள்பணி Antonio Filomeno Maria Losito அவர்கள் உலக மீட்பர் துறவு சபையைச் சேர்ந்தவர். இவர் Puglia (இத்தாலி)வில் 1838ல் பிறந்து 1917ல் இறந்தார். சிஸ்டெர்சியன் துறவு சபையின் அருள்சகோதரி Maria Benedetta Giuseppa Frey, 1836ல் உரோமையில் பிறந்து 1913ல் வித்தெர்போவில் இறந்தார். போலந்து நாட்டுப் பொதுநிலை விசுவாசி Anna Chrzanowska, 1902ல் வார்சாவில் பிறந்து 1973ல் கிராக்கோவில் இறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.