2015-09-30 16:31:00

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய குறுந்தகடு


செப்.30,2015. பல்வேறு இசைக் கலவையுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உரைகள் பதிவு செய்யப்பட்ட ஒரு புதிய குறுந்தகடு வருகிற நவம்பர் 27ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விழித்தெழுங்கள்! என்ற தலைப்பில் வெளியிடப்படும் இப்புதிய குறுந்தகடில், திருத்தந்தையின் உரைகளிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள், பல்வேறு மொழிகளில், கிரகோரியன் இசை முதல் ராக் இசை வரை பல்வேறு இசைக் கலவையுடன்  பதிவாகியிருக்கும்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் கொரியத் திருத்தூதுப் பயணத்தில் ஆற்றிய உரையைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள "விழித்தெழுங்கள்!, செல்லுங்கள், முன்னோக்கிச் செல்லுங்கள்"(Wake Up! Go! Go! Forward!) என்ற பாடல் வரிகள் Rolling Stone இதழின் இணையதளத்தில் ஒளிபரப்பப்படும்.

இந்தக் குறுந்தகடில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலியம், ஆங்கிலம், இஸ்பானியம், போர்த்துக்கீசியம் ஆகிய மொழிகளில் 11 இசைத் தடங்களில் பேசியிருப்பார்.

நிர்வானந்தா சுவாமி சரஸ்வதி எனவும் அறியப்படும் Giorgio Kriegsch, Tony Pagliuca, Mite Balduzzi, Giuseppe Dati, Lorenzo Piscopo, மற்றும் இசைக்கச்சேரி இயக்குனர்  Dino Doni ஆகியோரின் பங்களிப்புகள் இதில் இருக்கும். 

Wake Up! குறுந்தகடில், "Annuntio Vobis Gadium Mangum", "Salve Regina", "Laudato Sie…", "Poe Que' Sufren Los Ninos", "Non Lasciatevi Rubare La Speranza!", "La Iglesia No Puede Ser Una Ong!", "Wake Up! Go! Go! Forward!", "La Fa Es Entera, No Se Licua!", "Pace! Fratelli!", "Per La Famiglia", "Fazei O Que Ele Vos Disser" ஆகிய பாடல்கள் இடம்பெற்றிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.