2015-09-30 17:05:00

அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட அழைப்பு


செப்.30,2015. அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று ஏறக்குறைய இருபது ஆண்டுகள் ஆகியும், அந்த ஒப்பந்தம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்ற கவலையைத் தெரிவித்தார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.

ஐ.நா. பொது அவையில் கூடியுள்ள உலகத் தலைவர்களிடம் இவ்வாறு கூறிய பான் கி மூன் அவர்கள், அணு ஆயுதங்கள் அற்ற உலகை அமைப்பதற்கு அவசியமான அரசியல் ஆர்வம் வெளிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

இந்த அவையில் உள்ள இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கும் அனைவரையும் வரவேற்கிறேன், இங்கிருக்கின்ற, இந்த ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடாத அல்லது இன்னும் அமல்படுத்தாத நாடுகளின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதை பார்க்க விரும்புகிறேன் என்றும் கூறினார் பான் கி மூன்.

இந்த ஒப்பந்தத்தில் இதுவரை 164 உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இது அமலுக்கு வருவதற்கு இன்னும் நாடுகளின் கையெழுத்து அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். சீனா, இந்தியா, இஸ்ரேல், ஈரான், பாகிஸ்தான், எகிப்து, வட கொரியா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.