2015-09-25 16:34:00

கடுகு சிறுத்தாலும் : ஒருவரை எடைபோடுவது எப்படி?


1930களில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு பெரிய உற்பத்தி நிறுவனம் ஏராளமான இயந்திரங்களை தயாரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் ஜப்பானுக்கு ஓர் இயந்திரம் தேவைப்பட்டது. அந்த நிறுவனம் ஜப்பானுக்குத் தேவைப்பட்ட இயந்திரத்தை அனுப்பி வைத்தது. முதலில் நன்றாக வேலை செய்த அந்த இயந்திரம், சில நாள்களிலே வேலை செய்ய மறுத்தது. உடனே அதைத் தயாரித்த நிறுவனத்திற்கு அவசரச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்தது ஜப்பான். இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை, அதைச் சரிசெய்து கொடுப்பதற்கு உடனடியாக ஒருவரை இங்கே அனுப்பி வைக்கவும் என்ற செய்தியைப் பார்த்த அந்த நிறுவனம் ஒருவரை அனுப்பியது. அந்த நபரைப் பார்த்ததும் மற்றொரு அவசரச் செய்தி அந்நிறுவனத்திற்குப் பறந்தது. நீங்கள் அனுப்பி வைத்திருக்கும் ஆள் மிகவும் இளைஞராக இருக்கிறார், அதனால் தயவுகூர்ந்து கொஞ்சம் வயதானவராக, அனுபவமுள்ளவராக அனுப்பி வைத்தால் நல்லது என்று இருந்தது. அதற்குப் பதில் அனுப்பிய அந்த அமெரிக்க நிறுவனம், ஏற்கனவே நாங்கள் அனுப்பியுள்ள இளைஞரையே பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் அந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்தவரே அந்த இளைஞர்தான் என்று குறிப்பிட்டிருந்தது.

ஒரு மனிதரை எடைபோடுவது எப்படி? உருவத்தைப் பார்த்தா அல்லது உடையைப் பார்த்தா?         

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.