2015-09-20 16:53:00

திருப்பலிக்குப் பின் திருத்தந்தையின் மூவேளை செப உரை


செப்.20,2015. இயேசு தன் சிலுவையையும், மரணத்தையும் குறித்து சீடர்களிடம் பேசியபோது, அவர்கள் புரிந்துகொள்ளவில்லை, அவரிடம் விளக்கம் கேட்கவும் அஞ்சினார்கள் என்று நற்செய்தியில் வாசித்தோம்.

நாமும், நமது சிலுவைகளிலிருந்தும், அடுத்தவரின் சிலுவைகளிலிருந்தும் தப்பியோட நினைக்கிறோம். இத்திருப்பலியின் இறுதியில், நாம் அன்னை மரியாவிடம் திரும்புவோம். அந்த அன்னை சிலுவையின் அடியில் நின்றார் என்பதை நாம் அறிவோம். சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த தன் மகனே இவ்வுலகில் பெரியவர் என்பதை அன்னை மரியா நன்கு உணர்ந்தார்.

இவ்வேளையில் என் எண்ணங்கள் கொலம்பியா நாட்டு மக்களை நோக்கித் திரும்புகின்றன. அந்நாட்டில் ஆயிரக்கணக்கான மாசற்றவர்களின் குருதி சிந்தப்பட்டுள்ளது. அவர்களோடு சேர்ந்து இரத்தம் சிந்தும் கிறிஸ்து, அந்நாட்டில் ஒற்றுமையையும், ஒப்புரவையும் கொணரவேண்டும் என்று செபிப்போம்.

துன்பத்தில் வாடும் அனைத்து குடும்பங்களின் கண்ணீரை, அன்னை மரியா துடைக்கவேண்டும் என்று செபிப்போம். கியூபா நாட்டு மக்கள் அனைவரையும், அன்னையின் பாதுகாவலில் நான் ஒப்படைக்கிறேன். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.