2015-09-10 17:02:00

சிரியாவில் புலம்பெயர்ந்தோர் திருத்தந்தைக்கு அளித்த பரிசு


சிரியாவில் புலம்பெயர்ந்தோர் திருத்தந்தைக்கு அளித்த பரிசு

 

செப்.10,2015. பாக்தாத் நகரில் உள்ள சிரிய கத்தோலிக்கப் பங்குத்தளமான புனித யோசேப்பு பங்குத்தளத்தில் புகலிடம் அடைந்துள்ள 71 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் கரங்களால் உருவாக்கிய இரு பரிசுகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

கிறிஸ்து பிறப்பு காட்சி வடிவமைக்கப்பட்ட பூவேலைப்பாடுகள் நிறைந்த ஒரு துணியும், அரேபியர்கள் அணியும் ஒரு மேலுடையும், இப்புதன் மறைகல்வி உரைக்குப் பின்னர் திருத்தந்தையிடம் வழங்கப்பட்டன.

53 குழந்தைகள் உட்பட, 71 குடும்பங்களுக்கு அடைக்கலம் தந்துள்ள புனித யோசேப்பு பங்குத்தளத்தின் அருள் பணியாளர், Pius Cacha அவர்கள், புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்னர், திருத்தந்தையை நேரில் சந்தித்து, இக்குடும்பங்கள் அனுப்பியிருந்த பரிசுகளை ஒப்படைத்தார்.

அனைத்தையும் இழந்து தங்களை வந்து சேர்ந்திருக்கும் இம்மக்களுக்கு பொருளளவில் அதிக உதவிகள் செய்ய முடியவில்லையெனினும், அவர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளோம் என்று அருள்பணி Cacha அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்தோரை வரவேற்கும்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அகில உலகத் திருஅவைக்கு அண்மையில் விடுத்த அழைப்பு, பலரது கண்களைத் திறந்து, புலம்பெயர்ந்தோர் மீது நாம் காட்டவேண்டிய அக்கறையை அதிகப்படுத்தியுள்ளது என்று அருள்பணி Cacha அவர்கள் தன் பெட்டியில் எடுத்துரைத்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.