2015-09-09 16:41:00

அரசி 2ம் எலிசபெத்துக்கு கர்தினால் நிக்கோல்ஸ் வாழ்த்து


செப்.09,2015. மிக இளவயதில் அரசியாகப் பொறுப்பேற்றாலும், இத்தனை ஆண்டுகள் அந்தப் பணியை சிறந்த வகையில் ஆற்றியதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்று, இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களுக்கு வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பிரித்தானிய வரலாற்றில் மிக அதிக காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையை செப்டம்பர் 8, இச்செவ்வாயன்று, நிறைவேற்றிய இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத் அவர்களுக்கு, கத்தோலிக்கர்கள் சார்பில் தன் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கிறிஸ்தவ விழுமியங்களை தன் சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்தி வரும் அரசி எலிசபெத் அவர்களுக்கும், அவரது கணவர், இளவரசர் பிலிப் அவர்களுக்கும் இறைவன் நற்சுகத்தை வழங்கவேண்டும் என்று கர்தினால் நிக்கோல்ஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.