2015-09-08 17:12:00

இந்தியாவில் தண்ணீர் சிக்கனம் அவசியம்


செப்.08,2015. உலகில் தண்ணீரை அதிகம் பயன்படுத்தும் 122 நாடுகளுள் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதால், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும் என்று இந்தியர்களிடம் விண்ணப்பித்துள்ளது, இந்திய மத்திய நீர்வள அமைச்சகம்.

நீர்வள ஆதாரம் என எடுத்துக்கொண்டால், உலகிலுள்ள நீர்வளத்தில் 4 விழுக்காட்டையே கொண்டு, 180 உலகின் நாடுகளுள், 133வது இடத்தில் உள்ள இந்தியா, தண்ணீர் சிக்கனத்தை உணர்ந்து செயல்படவேண்டும் என்று கேட்டுள்ளது, மத்திய நீர்வள அமைச்சகம்.

இந்தியாவில் குடியிருப்புக்களுக்கு 8 விழுக்காடும், தொழிற்சாலைகளுக்கு 10 விழுக்காடும், விவசாயத்திற்கு 82 விழுக்காடும் தண்ணீரின் பயன்பாடு உள்ளதென அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.