2015-09-05 16:22:00

குடியேற்றதாரரை மதிப்புடன் வரவேற்கும் இடமாக மெக்சிகோ


செப்.05,2015. நீதி மற்றும் அமைதியில் மதிப்புடன்கூடிய குடியேற்றத்திற்கு மெக்சிகோ நாடு, திறந்த இடமாக அமைய வேண்டும் என்ற தங்களின் ஆவலை வெளியிட்டுள்ளனர் மெக்சிகோ ஆயர்கள்.

செப்டம்பர் 06, இஞ்ஞாயிறன்று மெக்சிகோவில் கடைப்பிடிக்கப்படும் குடியேற்றதாரர் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள, அந்நாட்டு ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் மேய்ப்புப்பணி ஆணைக்குழுத் தலைவர் ஆயர் Guillermo Ortiz Mondragón அவர்கள், இக்காலத்தில் பாதுகாப்பின்மையால் மெக்சிகோவில் மட்டுமல்ல, உலகெங்கும் மனிதர் இடம் பெயர்ந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

வன்முறை மற்றும் திட்டமிட்ட குற்றங்களால் ஏற்படும் பாதுகாப்பின்மையால் மக்கள் இடம்பெயர்கின்றனர் என்றுரைத்துள்ள ஆயர் Ortiz Mondragón அவர்கள், மெக்சிகோ நகரில் அறுபது வீடுகள் மற்றும் மையங்களில் திருஅவை குடியேற்றதாரர்க்கு அடைக்கலம் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

மெக்சிகோவில், உலக குடியேற்றதாரர் தினம் செப்டம்பர் 06, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகிறது.     

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.