2015-09-04 16:02:00

தொழிலாளர் வேலைநிறுத்தம் - இந்தியத் திருஅவை ஆதரவு


செப்.04,2015. தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்தியத் திருஅவை, அவர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தத்தை ஆதரிக்கிறது என்று இந்திய ஆயர் பேரவையின் தொழிலாளர் நலத்துறையின் தலைவர், ஆயர் ஆஸ்வால்ட் லூயிஸ் அவர்கள் UCA செய்தியிடம் கூறினார்.

இந்தியாவில் மத்திய அரசுக்கு எதிராக, இப்புதனன்று 15 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம், அரசுப் பணிகளை தனியார் மயமாக்க விழையும் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் என்று, குஜராத் மாநிலத்தில், மனித உரிமைகள் மையத்தை நடத்திவரும் இயேசு சபை அருள் பணியாளர் செட்ரிக் பிரகாஷ் அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.

பெரும் தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயலாற்றும் மத்திய அரசு, தொழிலாளர்கள் மற்றும் வறுமைப்பட்டோர் சார்பாக செயலாற்ற மறுக்கிறது என்று அருள்பணி பிரகாஷ் அவர்கள், குற்றம் சாட்டினார்.

தொழிலாளர் பிரச்சனைகளுக்கும், பொருள்களின் விலையேற்றத்திற்கும் உடனடி தீர்வுகள் இல்லையெனினும், மக்களின் பிரச்சனைகளை அரசு செவிமடுக்க வேண்டும் என்பதை, இந்த வேலை நிறுத்தம் மத்திய அரசுக்கு வலியுறுத்திக் கூறியுள்ளது என்று மனித உரிமை ஆர்வலர், அருள்பணி பிரகாஷ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.