2015-09-03 14:55:00

ஓட்டளிப்பதில் கத்தோலிக்கரின் கடமை - சிங்கப்பூர் பேராயர்


செப்.03,2015. பொறுப்புணர்வுடன் ஓட்டளிப்பது, ஒவ்வொரு கத்தோலிக்கரின் கடமை என்று, சிங்கப்பூர் பேராயர், William Goh Seng Chye அவர்கள் அண்மையில் வெளியிட்ட சுற்றுமடலில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 11, அடுத்த வெள்ளிக்கிழமை, சிங்கப்பூர் நகர-நாட்டில், வாக்களிப்பு இடம்பெறவிருப்பதால், நல்ல குடிமக்களின் கடமையை நினைவுறுத்தி, பேராயர் Goh அவர்கள், இந்த மேய்ப்புப்பணி மடலை வெளியிட்டுள்ளார்.

குறுகிய கட்சி மனப்பான்மைகளைக் களைந்து, நாட்டின் நலனை மட்டும் முன்னிறுத்தி, கத்தோலிக்கர்கள் வாகளிக்கவேண்டும் என்றும், இந்த வாக்களிப்பு சிறந்த முறையில் நடைபெற, அனைவரும் செபிக்கவேண்டும் என்றும், பேராயரின் மடல் வலியுறுத்துகிறது.

தங்கள் நாடு விடுதலை பெற்றதன் 50ம் ஆண்டு நிறைவை, அண்மையில் கொண்டாடிய சிங்கப்பூரில், 18 விழுக்காடு கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர் என்றும், மொத்த மக்கள் தொகையில் 5 விழுக்காடு அளவில் உள்ள கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, 2 இலட்சம் என்றும், ஆசிய செய்திக் குறிப்பு கூறுகிறது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.