2015-09-01 16:40:00

லெபனான் நாட்டில் மத உரிமைகள் குறித்த புதிய அறிக்கை


ஆக., 31,2015.  லெபனான் நாட்டில் மத உரிமைகள் குறித்த புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அந்நாட்டின் சுன்னி உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர்புடைய இஸ்லாமிய அமைப்பு ஒன்று.

கிறிஸ்தவர்களுக்கு மதச் சுதந்திரம் மறுக்கப்படுவதும், அவர்களின் கோவில்கள் மற்றும் உடைமைகள் தாக்கப்படுவதும் குறித்து கண்டனத்தை வெளியிட்டுள்ள இந்த இஸ்லாமிய அமைப்பு, இத்தகைய நடவடிக்கைகள், இஸ்லாமிய படிப்பினைகளுக்கு எதிராகச் செல்பவை எனவும் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய மதத்தின் பெயரால் கிறிஸ்தவர்களின் கல்வி மற்றும் சமூகக் கட்டடங்கள் சேதமாக்கப்படுவது, இஸ்லாமியப் போதனைகளுக்கும் கொள்கைகளுக்கும் எதிராகச் செயல்படுவதாகும் என, தன் கண்டனங்களை வெளியிட்டுள்ளது, பெய்ரூட்டில் இயங்கும் Makassed இஸ்லாமிய மனிதாபிமான அமைப்பு. 

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.