2015-08-31 16:02:00

நன்மை-தீமை எல்லைக்கோடு, நம் மனங்களில் உள்ளது - திருத்தந்தை


ஆக.31,2015. நன்மைக்கும் தீமைக்கும் இடைப்பட்ட எல்லைக்கோடு, நமக்கு வெளியே அல்ல, நம் மனங்களில் வரையப்பட்டுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆகஸ்ட் 30, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை வழங்கிய நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின், தங்கள் நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து, படகுகளிலும், லாரியிலும் பயணித்த மக்கள், அண்மைய நாட்களில், இறந்ததைக் குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார்.

மரணமடைந்த அப்பாவி மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துமாறு திருத்தந்தை விடுத்த அழைப்பை ஏற்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்காணக்கானோர் சில மணித்துளிகள் மௌனத்தைக் கடைபிடித்தனர்.

மேலும், 1915ம் ஆண்டு, ஆர்மேனியாவில் நிகழ்ந்த இனப் படுகொலையில் கொல்லப்பட்ட ஆயர் Flavianus Michael Malke அவர்கள், ஆகஸ்ட் 29, கடந்த சனிக்கிழமையன்று அருளாளராக உயர்த்தப்பட்டதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, அருளாளர் Malke அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு, சக்திவாய்ந்த பரிந்துரையாளராக, இறைவன் முன் இருக்கிறார் என்று குறிப்பிட்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.