2015-08-26 16:01:00

அமைதிக்காக, பாத்திமா அன்னை திருஉருவம், சிரியாவுக்குப் பயணம்


ஆக.26,2015. எவ்வித காரணமும் இன்றி குண்டு தாக்குதல்களுக்கு உள்ளாவது, சிரியாவில் நடைபெற்றுவரும் போரின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்று தமஸ்கு நகரின் மாரனைட் வழிபாட்டு முறை பேராயர் Samir Nassar அவர்கள் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 23 கடந்த ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதலில், மாரனைட் கத்தோலிக்கப் பேராலயமும் அதற்கு அருகே உள்ள இல்லங்களும் சேதமடைந்தன என்றும், 9 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 47 பேர் காயமுற்றனர் என்றும் பேராயர் Nassar அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு மடலில் கூறப்பட்டுள்ளது.

தொடரும் இக்கொடுமைகளைக் காணாதவண்ணம், மரணமடைந்தோர் பேறுபெற்றோர் என்ற அவநம்பிக்கை சொற்கள் அடிக்கடி மக்களிடம் எழுகிறது என்று பேராயர் Nassar அவர்கள் இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் அமைதியைக் கொணரும் ஒரு முயற்சியாக, வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி, தமஸ்கு நகருக்கு, பாத்திமா அன்னையின் திருஉருவம் எடுத்துச் செல்லப்படும் என்று ICN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.