2015-08-24 16:30:00

புனித Elian துறவு இல்ல கோவில் இடிக்கப்பட்டதற்கு ஆயர் கண்டனம்


ஆக.24,2015. சிரியாவில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித Elian கோவிலை இஸ்லாமிய தீவிரவாதக் குழு இடித்து, அப்புனிதரின் எலும்புகளை அவமரியாதை செய்துள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார், கத்தோலிக்க கல்தேய வழிபாட்டு முறை ஆயர் Antoine Audo.

ஐ.எஸ் என்ற இஸ்லாமிய தீவிரவாதக் குழுவின் படையினர், எவ்வித மனச்சான்றும், ஒழுக்கரீதி கோட்பாடுகளும் இன்றி நடத்தும் இத்தகைய அழிவு நடவடிக்கைகள், கிறிஸ்தவர்களுக்கு, வன்முறை, சகிப்பற்றதன்மை, மற்றும், அச்சத்தை பரப்பும் செய்தியாக உள்ளன என்றார் ஆயர் Audo.

புனித Elian துறவு இல்லக் கோவிலை தற்போது இடித்து தரைமட்டமாக்கியுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள், ஏற்கனவே மே மாதத்தில் இத்துறவு மடத்திலிருந்து துறவி Jacques Mouraud அவர்களையும்,  கத்தோலிக்க சுய விருப்பப் பணியாளர் Botros Hanna அவர்களையும், கடத்திச் சென்றுள்ளனர். இவ்விருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.