2015-08-24 16:24:00

இஸ்ராயேல் அத்துமீறல்களுக்கு மனிதாபிமான நிறுவனங்கள் கண்டனம்


ஆக.24,2015. வெஸ்ட் பேங்க் பகுதியிலுள்ள பாலஸ்தீனியர்களின் உடைமைகளை அழிவுக்குள்ளாக்கி வரும் இஸ்ராயேல் இராணுவத்தின்  நடவடிக்கைகள், உடனடியாக நிறுத்தப்பட, அனைத்துலக சமுதாயம், நடவடிக்கைகள் எடுக்குமாறு, மத மற்றும் மனிதாபிமான அமைப்புகள், ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

வெஸ்ட் பேங்க் பகுதியில், அனைத்துலக உதவி அமைப்புகளால் நடத்தப்படும் திட்டங்களும், அரசின் நடவடிக்கைகளால் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன எனக்கூறும், 31 நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, இஸ்ராயேல் அரசு, இதற்கு பொறுப்பேற்க வலியுறுத்தப்படவேண்டும் என விண்ணப்பிக்கிறது.

வெஸ்ட் பேங்கின் 10 பாலஸ்தீனிய சமூகங்களிடையே கடந்த வாரத்தில் இஸ்ராயேல் இராணுவம், 63 வீடுகளையும், அடிப்படை கட்டுமானப் பணிகளையும் அழிவுக்குள்ளாக்கியுள்ளதாக உரைக்கும், 31 மத மற்றும் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டறிக்கை, இதில் 10 கட்டடங்கள், மனிதாபிமான உதவிகள் ஆற்றும் அமைப்புகளுக்குச் சொந்தமானவை எனவும் தெரிவிக்கிறது.

மனிதாபிமான அமைப்புகளின் இக்கட்டடங்கள் இடிக்கப்பட்டதற்காக இழப்பீட்டு தொகையை, இஸ்ராயேல் அரசு, இந்நிறுவனக்களுக்கு வழங்கவேண்டும் எனவும் இவ்வறிக்கையில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.