2015-08-22 16:13:00

வியட்னாம் புதிய சமயச் சட்டம் மனித உரிமைகளை மீறுவதாய் உள்ளது


ஆக.22,2015. வியட்னாமில் மதங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2015ம் ஆண்டின் இறுதிக்குள் அமல்படுத்த திட்டமிடப்பட்டுவரும் புதிய சட்டம், மனிதரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாய் உள்ளது என்று அந்நாட்டு கத்தோலிக்கர் உட்பட பல்சமயத்தவர் குறை கூறியுள்ளனர்.

2015ம் ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2016ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறைக்குக் கொண்டுவர வியட்னாம் அரசு திட்டமிடும் இப்புதிய சட்டம், சமய நடவடிக்கைகளை இயலாததாக ஆக்கும் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளார் உலக மீட்பர் சபை அருள்பணியாளர் Anton Thanh Le Ngoc.

மேலும், Caodaist என்ற வியட்னாமின் பூர்வீக இனத்தவர் மதத்தைச் சேர்ந்த 37 பிரதிநிதிகள், இப்புதிய சட்டம் இரத்து செய்யப்படுமாறு அந்நாட்டு சமய விவகாரக் குழுவுக்குத் திறந்த கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே, வியட்னாம் கத்தோலிக்க ஆயர்களும் ஏற்கனவே இச்சட்டத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஏறக்குறைய அறுபது இலட்சம் பேர் Caodaist பூர்வீக இன மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.