ஆக.21,2015. இஸ்ரேலின் வட பகுதியில் விலைக்கு வாங்கப்பட்ட ஒரு நிலப் பகுதியில் புதைபொருள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் நூற்றாண்டு தொழுகைக்கூடம் ஒன்று, புனித மகதலா மரியா அவர்கள் ஊரைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தொழுகைக்கூடத்தோடு, "bimah" எனப்படும் பழங்கால பலிபீடம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதைபொருள் ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள், இதனை “மகதலா கல்” என்று அழைத்து வருகின்றனர்.
இயேசு கலிலேயாவிலுள்ள தொழுகைக்கூடத்தில் போதித்தார் என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் நூற்றாண்டு தொழுகைக்கூடம் இது மட்டுமே என்பதால், இப்பகுதியில் இயேசு கிறிஸ்து போதித்த தொழுகைக்கூடம் இதுவாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவ்விடத்தில் ஆய்வாளர்கள் தோண்டி எடுத்துள்ள இரண்டாயிரம் ஆண்டு பழமையுடைய ஒரு குடுவை, இயேசு தொழுகைக்கூடத்தில் நுழைவதற்கு முன்னர் அவர் கரங்களைக் கழுவப் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
ஆதாரம் : Christianglobe / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |