2015-08-21 13:05:00

கடுகு சிறுத்தாலும்...: நலத் திட்டங்களின் நிர்வாகச் செலவுகள்


நாம் எவ்வளவுதான் நலத்திட்டங்களை அறிவித்தாலும், மக்கள் ஏன் எப்போதும் ஏழைகளாகவே இருக்கின்றார்கள் என்ற சந்தேகம் ஒருநாள் அக்பருக்கு வந்தது. எனவே அவர், பீர்பாலை அழைத்து விளக்கம் கேட்டார். அக்பரின் நிதி அமைச்சரை அழைத்த பீர்பால், அவரின் இரண்டு கைகளையும் ஒரு கிண்ணம் போல இணைக்கச் சொல்லி, நிதி அமைச்சரின் இணைந்திருந்த கைகளில், அக்பரை விட்டு, ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்ற சொன்னார். பிறகு, நிதி அமைச்சரை அப்படியே நடந்து போகச் சொல்லி, கல்வி அமைச்சரின் கையில் நிதி அமைச்சரின் கையிலிருந்த நீரை மாற்ற சொன்னார். இப்போது கல்வி அமைச்சர் கையில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. பிறகு அவரை மற்றுமோர் அமைச்சர் கையில் அந்த நீரை ஊற்றச் சொன்னார். இவ்வாறு, அரசவை மண்டபம் முழுவதும் எல்லா அமைச்சர்களின் கையிலும் தண்ணீர் இடம் மாறி, கடைசியில், அரசவையில் நின்றிருந்த குடியானவன் கையில் ஊற்ற சொன்னார். ஆனால் அந்த குடியானவன் கையில் ஊற்றும்போது,  கையில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை.

பல வேளைகளில், நலத் திட்டங்களின் நிர்வாகச் செலவுகள், ஒதுக்கியுள்ள மொத்த தொகையைவிட அதிகமாகி விடுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.