2015-08-18 15:09:00

சீனாவில் கிறிஸ்தவம் வேகமாக வளர்கிறது


ஆக.18,2015. சீனாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஏழு விழுக்காடு வீதம் அதிகரித்து வருவதாக CNA செய்தி நிறுவனம் கூறுகின்றது.

சீனாவில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி என்ற தலைப்பில் Stark coauthored, Xiuhua Wang ஆகிய இரு சமூகவியலாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, 1980ம் ஆண்டில் சீனாவில் ஒரு கோடியாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, 2007ம் ஆண்டில் ஆறு கோடியாக உயர்ந்துள்ளது எனத் தெரிய வருகிறது.

சீனாவில் கடந்த ஆண்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பத்து கோடியாக இருந்தது எனவும், இவ்வுயர்வைப் பார்க்கும்போது அந்நாட்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஏழு விழுக்காடு வீதம் அதிகரித்து வருகின்றது என்று தெரிவதாகவும் அந்த ஆய்வு கூறுகின்றது.

பாரம்பரிய ஆசியக் கலாச்சாரத்துக்கும், நவீன தொழிற்சாலை-தொழில்நுட்பத்துக்கும் இடையே ஒரு கலாச்சார முரண்பட்ட தன்மையை அனுபவிக்கும் படித்த மக்கள், இதற்கு கிறிஸ்தவத்தில் பதில் இருப்பதாய் உணர்வதால், சீனாவில் கிறிஸ்தவம் வளர்கின்றது என்று அந்த ஆய்வு கூறுகின்றது.

ஆதாரம் : CNA /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.