2015-08-17 16:14:00

சித்ரவதைகளுக்கு எதிராக கிறிஸ்தவர் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும்


ஆக.17,2015. இறையரசைக் கட்டியெழுப்புவதில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவரும் நேபாளக் கிறிஸ்தவர்கள், சிதரவதைகளுக்கு எதிராகவும், இறையரசைக் கட்டியெழுப்புவதிலும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் நேபாள அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர்  Paul Simick.

ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளுக்கு உண்மையுள்ளவர்களாக செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த ஆயர் Simick அவர்கள், நேபாள நாடு முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பது குறித்து மகிழ்ச்சியடையும் அதே வேளையில், மக்கள் இயேசுவின் வார்த்தைகளை அறிந்துகொள்ள உதவும் நோக்கில், உண்மையுள்ளவர்களாக இருப்பதோடு, அனைவருக்கும் நீதியை வழங்குபவர்களாகவும் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்

நேபாள கத்தோலிக்க சமூகம், கடவுளுக்கும் தேசத்திற்கும் உண்மையுள்ளதாக செயல்படும்போதுதான், நீதி, ஒருமைப்பாடு மற்றும் அமைதி நிறைந்த சமூகத்தை உருவாக்கமுடியும் எனவும் கூறினார் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Paul Simick.

2 கோடியே 75 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நேபாளத்தில், 7,200 கத்தோலிக்கர்களே வாழ்கின்றனர். 

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.