2015-08-14 15:46:00

கடுகு சிறுத்தாலும்.. : இலவசங்களுக்கும் இலக்கு இருக்கிறது


ஒருமுறை துருக்கி மன்னர், காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அவருடைய பரிவாரத்துடன் முல்லாவும் சென்றார். மன்னருடன் சென்ற சமையல்கார குழுவின் தலைவர், அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்துவிட்டார். கடும் கோபம் கொண்ட மன்னர், தனது வீரர்களில் ஒருவரை அழைத்து, அண்மையிலிருக்கும் கிராமத்திற்குச் சென்று யார் வீட்டிலாவது கொஞ்சம் உப்பு வாங்கிவா என உத்திரவிட்டார்.

உடனே முல்லா, மன்னரை வணங்கி, படை வீர்ரிடம் கொஞ்சம் காசு கொடுத்து அனுப்புங்கள், குடிமக்களிடம் உப்பு இனாமாகக் கேட்கவேண்டாம் என்றார்.

ஏன் குடிமக்கள் ஒரு கை உப்பை இலவசமாகக் கொடுக்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறார்களா என மன்னர் ஆச்சரியத்தோடுக் கேட்டார்.

என்ன காரணத்தினால் நாம் உப்பு கேட்கிறோம் என்று மக்களுக்குத் தெரியாது. உப்பு மிகவும் மலிவான பொருளாக இருந்தாலும், மன்னரே இலவசமாகப் பெறத் தொடங்கிவிட்டால், அதிகாரத்திலிருப்போர், தாங்களும் தங்கள் அதிகாரத்தின் மூலம் எதையும் இலவசமாகப் பெற்றுவிடலாம் என்ற எண்ணம் பிறக்கக் காரணமாகிவிடும். மன்னரே உப்பை விலை கொடுத்துத்தான் வாங்குகின்றார் என்றால், மற்றவர்கள் இலவசம் குறித்து அஞ்சுவர். அதனால்தான் சொன்னேன், என்றார் முல்லா.

அவர் சொன்னது சரிதான் என்று துருக்கி மன்னருக்குத் தோன்றியது. ஆகவே பணம் கொடுத்தே உப்பை வாங்கிவருமாறு படை வீரருக்கு உத்தரவிட்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.