2015-08-13 16:17:00

சிலுவைகளை அகற்றும் முயற்சிகளை, அரசு உடனே கைவிடவேண்டும்


ஆக.13,2015 சீனாவின் Zhejiang மாநிலத்தில் கிறிஸ்தவ கோவில்களின் சிலுவைகளை அகற்றும் முயற்சிகளை, அரசு உடனே கைவிடவேண்டும் என்ற விண்ணப்பத்தை, ஹாங்காங் கர்தினால், John Tong Hon அவர்கள், இப்புதனன்று அனுப்பியுள்ளார்.

சீனாவின் மையப்பகுதியில், வாழும் கிறிஸ்தவர்கள், சமயம் சார்ந்த வன்முறைகளைச் சந்தித்துவரும் வேளையில், ஹாங்காங் வாழும் கிறிஸ்தவர்கள், அவர்களுக்காக, செபங்களையும், உண்ணா நோன்புகளையும் மேற்கொள்ளுமாறு கர்தினால் Tong Hon அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஹாங்காங்கில் உள்ள ஆங்கிலிக்கன் பேராயர், Paul Kwong அவர்களும் அண்மையில் சீன அரசுக்கு இத்தகைய விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளார் என்று UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.

2,10,000 கத்தோலிக்கர்கள் உட்பட, 20 இலட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்களைக் கொண்ட Zhejiang மாநிலத்தில், 2013ம் ஆண்டு முதல், அம்மாநில அரசால் மேற்கொள்ளப்பட்ட சிலுவை அகற்றும் முயற்சியில், இதுவரை 2,100 சிலுவைகளுக்கு மேல் அகற்றப்பட்டுள்ளன என்று சமூக வலைத்தளங்கள் கூறுகின்றன.

ஆதாரம் :  UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.