2015-08-10 17:04:00

மது அருந்தும் 30 விழுக்காடு பேருக்கு மனநோய் ஏற்படுகிறது


ஆக.10,2015. மது அருந்துவோரில் 30 விழுக்காட்டினருக்கு மனநோய் ஏற்படுகிறது; அதனால் சமூகத்தில் இன்று விவாகரத்து, தற்கொலை, கொலை சம்பவங்கள் அதிகரிப்பதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

'மனப்பிறழ்வு' என்று மனநல மருத்துவத்தில் சொல்லப்படும் நோய் உள்ளவர்களை மேலோட்டமாக பார்த்தால் வேறு எந்த மாற்றங்களும் தெரியாது. ஆனால் இவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின்  நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 3 விழுக்காட்டினரைப் பாதிக்கும் இந்த மனநோய், குடிப்பழக்கம் உள்ளவர்களிடையே 30 விழுக்காடு வரை காணப்படுவதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகை மனநோய் மது அருந்துவோரிடையே அதிகம் ஏற்படுவதால், இளைஞர்கள் ஆரம்பத்திலே குடிப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுப்பது பெற்றோர் மற்றும் இந்த சமுதாயத்தின் கடமை என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ஆதாரம் : The Hindu/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.