2015-08-10 16:54:00

இந்தியாவில் உடலுறுப்பு தானம் செய்பவர்கள் 1விழுக்காடு மட்டுமே


ஆக.10,2015. 121 கோடி மக்கட்தொகை கொண்ட இந்திய மக்களில், வெறும் 1 விழுக்காட்டினர் மட்டுமே உடலுறுப்பு தானம் செய்வதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் சிறுநீரகத்திற்கு 2 இலட்சம் பேரும், கல்லீரலுக்காக 1 இலட்சம் பேரும் மருத்துவமனையில் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், அவர்களில் 2 முதல் 3 விழுக்காட்டினர் மட்டுமே உடலுறுப்புகளைத் தானமாக பெறுகின்றனர் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேற்கத்திய நாடுகளில் 70 முதல் 80 விழுக்காட்டினர் உடலுறுப்புகளைத் தானம் செய்யும் நிலையில், இந்தியாவில் வெறும் 1 விழுக்காடு மட்டுமே தானம் செய்வதற்கு, மூட நம்பிக்கைகளே காரணம் எனவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு வருடங்களாக உறுப்பு தானத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என கவலை தெரிவித்துள்ள மருத்துவர்கள், உடலுறுப்பு தானம் தரும் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த, இந்தியாவில் ஆண்டுதோறும், ஆகஸ்ட் 13ம் தேதி, உடலுறுப்பு தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.  

ஆதாரம் : Dinamalar/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.