2015-08-06 17:06:00

பாலஸ்தீன இளையோர் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி


ஆக.06,2015. காசாப் பகுதியில் வாழும் பாலஸ்தீன இளையோர் தீட்டியுள்ள ஓவியங்கள் அடங்கிய ஒரு கண்காட்சி, இலண்டன் மாநகரில் ஆகஸ்ட் 7, இவ்வெள்ளி முதல் ஆகஸ்ட் 22 முடிய மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீனா நாடுகளுக்கிடையே கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி முதல், 51 நாட்கள் நடைபெற்ற மோதல்களில், 1,500க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 5,00,000த்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்தனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

இந்த மோதல்களால் பாதிக்கப்பட்ட 4,00,000 த்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கும், இளையோருக்கும் உள்ளத்தளவில் நலம் வழங்கும் முயற்சிகளை, CFTA எனப்படும் கலாச்சார மற்றும் சுதந்திர எண்ணம் கழகம் என்ற கிறிஸ்தவ உதவி அமைப்பு மேற்கொண்டது.

CFTA அமைப்பின் வழியே, இளையோர் தங்கள் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தி, வரைந்துள்ள 400க்கும் அதிகமான ஓவியங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி, ஆகஸ்ட் 6, இவ்வியாழன் மாலை திறந்துவைக்கப்பட்டது.

இளையோரும் குழந்தைகளும் வரைந்துள்ள ஓவியங்களுடன், Heidi Levine என்ற புகைப்படக் கலைஞர், காசாப் பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களை பதிவு செய்துள்ள புகைப்படங்களும் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. 

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.