2015-08-05 16:02:00

மியான்மார் வெள்ளம் – கர்தினால் Maung Bo விண்ணப்பம்


ஆக.05,2015. மியான்மாரின் மிகவும் பின்தங்கிய, வறுமைப்பட்ட பகுதி, தற்போது, இயற்கைச் சீற்றத்தின் விளைவுகளால் மேலும் துன்புற்று வருகிறது என்று, மியான்மார் கர்தினால் Charles Maung Bo அவர்கள் கூறினார்.

மியான்மாரின் Rakhine மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 2,15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மியான்மார் அரசு அறிவித்துள்ளது.

மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட Rakhine மாநிலத்தில், Rohingya இனத்தைச் சேர்ந்த 1,00,000த்திற்கும் அதிமான இஸ்லாமியர், ஏற்கனவே முகாம்களில் தங்கியுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Maung Bo அவர்கள், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், இம்மக்களின் துன்பங்கள் மேலும் அதிகரித்துள்ளன என்று கூறினார்.

கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பான காரித்தாஸ் வழியாகவும், ஏனைய கத்தோலிக்க அமைப்புக்கள் வழியாகவும் உதவிகள் மேற்கொள்ளப்பட்டாலும், வெள்ளத்தின் முழுமையான பாதிப்புக்கள் இன்னும் வந்தவண்ணம் உள்ளன என்று, UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இயற்கைச் சீற்றங்களுக்கு உள்ளாகும் மியான்மாரில், 2008ம் ஆண்டு வீசிய நர்கீஸ் புயலால், 1,40,000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்று UCAN செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.