2015-08-05 16:24:00

அப்பம் பலுகும் கோவிலைப் புதுப்பிக்க யூத ரபிகள் உதவி


ஆக.05,2015. இயேசு அப்பத்தை பலுகச் செய்த புதுமையின் நினைவாக, புனித பூமியில் அமைந்துள்ள கோவிலை மீண்டும் புதுப்பிக்கும் பணிக்கு, யூத மத ரபிகள் முன்வந்துள்ளனர்.

இவ்வாண்டு, ஜூன் 18ம் தேதியன்று, தீவிரவாதக் கொள்கை கொண்ட Zionist எனப்படும் குழுவைச் சார்ந்த இளையோரால் சேதமாக்கப்பட்ட இக்கோவிலை மீண்டும் புதுப்பிக்கும் பணிக்கு, யூத மதத் தலைவர்கள் முன்வந்துள்ளனர் என்று Zenit செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

யூதர்களின் முக்கியத் திருத்தலமான எருசலேம் கோவில் அழிந்ததால், அதன்  விளைவுகளை யூதர்கள் இன்றும் உணர்ந்து வரும்வேளையில், வேறு மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத் தலங்கள் மீது யூதர்கள் உயர்ந்த மதிப்பு கொண்டுள்ளனர் என்று யூத ரபி, Alon Goshen-Gottstein அவர்கள் கூறினார்.

புனித பூமியின் Tabgha என்ற இடத்தில், 5வது நூற்றாண்டில் கட்டப்பட்டதென்று சொல்லப்படும் 'அப்பத்தைப் பலுகச் செய்த புதுமை' கோவில், பெனடிக்ட் துறவு சபையினரின் கண்காணிப்பில் பாதுக்காக்கப்படுகிறது. 

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.