2015-08-04 16:01:00

உயிரினங்கள் வாழ தகுதியுள்ள 3 புதிய கோளங்கள் கண்டுபிடிப்பு


ஆக.04,2015. பூமியைப் போன்று உயிரினங்கள் வாழத் தகுதி படைத்த மூன்று புதிய கோளங்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்பெயினில் உள்ள ஒரு தீவில் அமைக்கப்பட்டுள்ள ஹார்ப்ஸ் என்ற அதிநவீன தொலைநோக்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில், பூமி உள்ளிட்ட கோளங்கள் சூரியனை சுற்றி வருவதைப் போன்று, இந்த 3 கோளங்களும் ஒரு விண்மீனை, நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன என்று தெரியவந்துள்ளது.

இந்த 3 புதிய கோளங்களும் பூமியைப் போன்றே உயிரினங்கள் வாழும் தகுதி படைத்த நிலையில், காற்று மற்றும் நீர் அகியவற்றைக கொண்டுருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இவை உள்ளன.

இவற்றுக்கு ‘HD219134’ என பெயரிட்டுள்ளனர். பூமியைப் போன்றே இவற்றின் மேற்பரப்பும் அடர்த்தியுடன் காணப்படுகிறது. மிகுந்த வெளிச்சத்துடன் கூடிய இக்கோளங்களை இரவில் வெறுங்கண்ணால் பார்க்க முடியும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆதாரம் :  Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.