2015-08-01 15:52:00

குடும்பங்களில் விருந்தோம்பும் பண்பு மிக முக்கியம்


ஆக.01,2015.  “குடும்பங்களின் விருந்தோம்பும் பண்பு, இக்காலத்தில், குறிப்பாக, கடும் வறுமைச் சூழல்களில் அவசியமான மிக முக்கிய பண்பாகும்”  என்ற வார்த்தைகளை, தனது டுவிட்டரில் இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட நிலையில் வாழும் மக்களை, நம் அடுத்திருப்பவர்களாக கற்றுக்கொள்வதற்கு, இந்த ஆகஸ்ட் மாதத்தில் இறைவனிடம் அருள் வேண்டுவோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன்னார்வப் பணியாளர்கள், தேவையில் இருப்போர்க்கு தங்களின் பணிகளை மனத்தாராளத்துடன் வழங்குமாறு செபிப்போம் என்றும் கேட்டுள்ளார் திருத்தந்தை.

இன்னும், மெக்சிகோவில், நகரின் முக்கிய சாலையில் சென்றுகொண்டிருந்த ஓர் ஊர்வலத்தின்மீது வாகனம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து சென்றதில் இறந்தவர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

மெக்சிகோவின் Zacatecas மாநிலத்தில் Mazapil நகரில் நாசரேத் இயேசு தினத்தைச் சிறப்பித்த மக்கள், அந்நகர் புனித பெரிய கிரகரி ஆலயத்திற்கு ஊர்வலமாகச் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் 27 பேர் இறந்தனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

Zacatecas ஆயர் Sigifredo Noriega Barceló அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில் இந்த ஆறுதல் செய்தியை அனுப்பியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.