2015-07-31 16:44:00

இந்தியா-பங்களாதேஷ் எல்லைத் தகராறு முடிவுற்றது


ஜூலை,31,2015. ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாக தங்களுக்கென சொந்த நாடு இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வதற்குக் காரணமான இந்திய-பங்களாதேஷ் எல்லைத் தகராறு இவ்வெள்ளியன்று முடிவுக்கு வந்தது.

இவ்விரு நாடுகளின் எல்லைகளில் வாழ்ந்த ஏறக்குறைய ஐம்பதாயிரம் மக்கள் மெழுகுதிரிகளை ஏற்றி தங்களின் புதிய விடுதலையைக் கொண்டாடினர்.

இந்திய நிலப்பரப்பிலோ, அல்லது பங்களாதேஷ் நிலப்பரப்பிலோ வாழ விரும்பும் மக்களுக்கு அந்தந்த நாடுகளின் குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவும், பங்களாதேஷிம் தங்களின் எல்லையில், நூற்று அறுபதுக்கும் அதிகமான சிறிய நிலப்பரப்புகளைப் பரிமாறிக்கொண்டுள்ளதையடுத்து உலகின் மிகவும் சிக்கலான எல்லைத் தகராறு ஒன்று முடிவுக்கு வந்துள்ளது.

பங்களாதேஷில் இந்தியாவுக்குச் சொந்தமான சிறு இடங்கள் பலவும், அதேபோல இந்தியாவில் பங்களாதேஷிக்குச் சொந்தமான சிறு இடங்கள் பலவும் உள்ளன. இந்தச் சிறு பகுதிகள் தற்போது அது அமைந்துள்ள நாட்டுடனேயே சேர்க்கப்படுகின்றன.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.