2015-07-31 16:38:00

அப்துல் கலாம் பெயரில் விருது; தமிழக அரசு அறிவிப்பு


ஜூலை,31,2015. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவாக, அப்துல் கலாம் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் அறிவியல் வளர்ச்சிக்கும், மனித மேம்பாட்டுக்கும், மாணவர்களின் நலனுக்கும் ஆற்றிய பெரும் பங்கைப் போற்றும் விதமாக ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது’என்ற ஒரு விருது, ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட வேண்டுமென்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று  தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இவ்விருது, அறிவியல் வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும்.

இந்த விருதைப் பெறுபவருக்கு 8 கிராம் தங்கப் பதக்கம், ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். இந்த விருது இந்த 2015ம் ஆண்டு முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும், அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி,  இளையோர் எழுச்சி நாளாகவும் கடைப்பிடிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.   

ஆதாரம் : Agencies/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.