2015-07-30 17:11:00

கானடா ஆயர்கள் காருண்ய கொலைச் சட்டத்திற்கு எதிர்ப்பு


ஜூலை,30,2015. கானடாவில் மருத்துவரின் உதவியுடன் நடத்தப்படும் தற்கொலை மற்றும் காருண்யக் கொலையை, சட்ட முறைப்படி அங்கீகரிப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு கானடா ஆயர்கள் தங்களின் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

காருண்யக் கொலை குறித்த வரைவுத் தொகுப்பில், இறப்பதற்கு மருத்துவர் உதவி, உதவியுன் மரணம் அல்லது மாண்புடன் உயிர்விடுதல் போன்ற பதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, இவை, ஒரு மனிதரின் வாழ்வைப் பறிப்பதேயன்றி வேறல்ல என்று கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் ஆயர்கள்.

இது, பிறரின் உதவியோடு நடத்தப்படும் தற்கொலை என்றும், ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு மற்றவர் கருவியாக இருக்கிறார் என்றும் இந்தத் தொகுப்பு உணர்த்துக்கின்றது என்றும் ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம், நலவாழ்வுப் பணியாளர்கள், தங்களின் மனச்சான்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், காருண்யக் கொலை அல்லது உதவியுடன் நடத்தப்படும் தற்கொலை நடவடிக்கையிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுள்ளனர் கானடா ஆயர்கள்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.