2015-07-29 17:13:00

ஏமன்-மனிதாபிமானபேரிடரைத் தடுப்பதற்கு போர் நிறுத்தம் அவசியம்


ஜூலை,29,2015. ஏமன் நாட்டில் இடம்பெற்றுவரும் சண்டையால் ஏற்கனவே விவரிக்க முடியாத சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் மனிதாபிமான பேரிடரைத் தடுப்பதற்கு நிலையான போர் நிறுத்தம் அவசியம் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார்.

ஏமனில் போரிடும் எல்லாத் தரப்புகளும் போரை நிறுத்துவதற்கு பன்னாட்டு சமுதாயம் தனது முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறும், இதன்மூலம் மனிதாபிமான உதவிகளைத் தடையின்றி ஆற்ற முடியும் என்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. நேரடிப் பொதுச் செயலர் ஸ்டீபன் ஓ ப்ரைன் கேட்டுக்கொண்டார்.

ஏமனில் 80 விழுக்காட்டு மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன, கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவரை 1,895க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.   

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.