2015-07-25 16:22:00

நேபாளம்-3மாதங்களில் 300,000 மேற்பட்டவர்க்கு காரித்தாஸ் உதவி


ஜூலை,25,2015. நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று மாதங்கள் ஆகியுள்ளவேளை, அந்நாட்டில் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, நாட்டின் வெகு தொலைவிலுள்ள சில இடங்களில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கியுள்ளது நேபாள காரித்தாஸ் பிறரன்பு நிறுவனம்.

நேபாள காரித்தாஸின் இப்பணிகள் பற்றி விளக்கிய, அதன் திட்டப் பொறுப்பாளர் Manindra Malla அவர்கள், நிலச்சரிவுகள், மோசமான காலநிலை போன்ற பல சவால்களையும் தவிர்த்து, காரித்தாஸ் பணியாளர்கள் அர்ப்பணத்துடன் பணி செய்வதால், நாட்டின் வெகு தொலைவிடங்களுக்குச் சென்று உதவ முடிகின்றது என்று தெரிவித்தார்.

நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர், அதில் பாதிக்கப்பட்டவர்களுள் 2,94,980க்கும் மேற்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளை ஆற்றியுள்ளது நேபாள காரித்தாஸ் நிறுவனம். 

அனைத்துலக கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பிலுள்ள 160க்கும் மேற்பட்ட கிளை அமைப்புகளில் நேபாள காரித்தாஸ் நிறுவனமும் ஒன்றாகும்.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.