2015-07-25 15:48:00

கடுகு சிறுத்தாலும் – உலகெங்கும் பகிர்வுப் புதுமை தேவை...


Huffington Post என்ற நாளிதழில், வெளியான ஒரு செய்தியின் தலைப்பு: “We Already Grow Enough Food For 10 Billion People -- and Still Can't End Hunger” - அதாவது, "1000 கோடி மக்களுக்குப் போதுமான உணவை நாம் உற்பத்தி செய்கிறோம் - இருப்பினும், பட்டினியை ஒழிக்க முடியவில்லை"

ஊடகங்களில் வெளியான ஒரு புள்ளிவிவரத்தின்படி, ஒவ்வொரு நாளும் 3.6 நொடிக்கு ஒருவர் பட்டினியால் இறக்கின்றார். இதில் என்ன கொடுமை என்றால், இந்த மரணங்கள் தேவையற்றவை. உலகத்தின் இன்றைய மக்கள் தொகை 730 கோடி. உலகில் தினம் தினம் 750 கோடி மக்கள் உண்பதற்குத் தேவையான அளவு உணவு உற்பத்தியாகிறது. இருந்தாலும், 140 கோடிக்கும் மேலான மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு நாளும் 160 கோடி மக்களுக்குப் போய் சேரவேண்டிய உணவு, வீணாகக் குப்பையில் எறியப்படுகிறது. இது வேதனை தரும் உண்மை. இந்த நிலையால், ஒவ்வோர் ஆண்டும் 30 இலட்சம் மக்கள் பட்டினியால் இறக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.

இந்தத் தேவையற்ற மரணங்கள் நிறுத்தப்பட வேண்டுமானால், பகிர்வுப் புதுமை உலகமெல்லாம் நடக்கவேண்டும். ஒரு சிறுவன் பகிர்ந்த ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு இயேசு உணவளித்த புதுமையை (யோவான் நற்செய்தி 6: 1-15) இந்த ஞாயிறு சிந்திக்கும்போது, பகிர்வுப் புதுமைகள் நம்மிடமிருந்து ஆரம்பமாகட்டுமே!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.