2015-07-24 17:06:00

உலகில் கடும் ஏழைகளில் 4ல்ஒருவர் எட்டு இந்திய மாநிலங்களில்


ஜூலை,24,2015. உலகில் கடும் வறுமையில் வாழ்வோரில் நான்கில் ஒரு பாகத்தினர், அதாவது உலகில் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் 160 கோடிப் பேரில் 44 கோடிப் பேர், எட்டு இந்திய மாநிலங்களில் வாழ்கின்றனர் என்று இவ்வியாழனன்று இந்திய மக்களவையில் கூறப்பட்டது.

ஆக்ஸ்ஃபோர்டு வறுமை மற்றும் மனித வளர்ச்சி அமைப்பு கடந்த ஜூன் 22ம் தேதி வெளியிட்ட பலகூறு ஏழ்மைக் குறியீடு அறிக்கையில், பீகார்,சட்டீஸ்கார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, இராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய எட்டு மாநிலங்கள் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்பவையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி, நலவாழ்வு, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை, அமைச்சர் இந்தர்ஜித் ராவ் இந்திய மக்களவையில் எழுத்துவடிவில் அறிவித்தார்.

ஆதாரம் : IANS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.