2015-07-21 16:03:00

பிறர்மீது இவ்வளவு மனிதமற்று நாம் ஏன் நடந்து கொள்கிறோம்?


ஜூலை,21,2015. தென் அமெரிக்க நாடான பரகுவாயில் ஒரு வராத்திற்குள் காவல்துறை உறுப்பினர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளவேளை, பிறர்மீது இவ்வளவு மனிதமற்று நாம் ஏன் நடந்து கொள்கிறோம்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

பரகுவாய் நாட்டின் வடபகுதியில் ஒரு வராத்திற்குள்ளாக ஐந்து காவல்துறையினர் குண்டு வெடிப்புகளில் வன்முறையால் கொலைசெய்யப்பட்டிருப்பது குறித்த தனது கண்டனத்தை வெளியிட்டார் காக்குப்பே ஆயர் Catalino Claudio Giménez Medina.

தாங்கள் பகைவர்களாக நினைப்பவர்களை, முற்றிலும் கொடூரச் செயல்களால்  ஒழிக்கும் குற்றக் கும்பல்களின் எண்ணப் போக்குகளை, தனது மறையுரையில் வன்மையாய்க் கண்டித்த ஆயர் Giménez Medina அவர்கள், நீண்ட கால காழ்ப்புணர்வும், வெறுப்பும் கொண்ட செயல்கள், வாழ்வு மீது முழு வெறுப்பையே வெளிப்படுத்துகின்றன என்று கவலை தெரிவித்தார்.

இந்தக் குற்றச் செயல்களுக்கு முன்பாக, திருஅவை மற்றும் நாட்டைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட ஆயர், நம் மத்தியில் இடம்பெறுவது என்ன என்பதை சிந்திக்குமாறும் அழைப்பு விடுத்தார்.

பரகுவாய் நாட்டின் வடபகுதியில், 2013ம் ஆண்டிலிருந்து இதுவரை, படைவீரர், காவல்துறையினர் உட்பட 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.