2015-07-20 17:03:00

லெபனானில் அரசியல் தீர்வுக்கு கர்தினால் வேண்டுகோள்


ஜூலை,20,2015.  கடந்த ஓராண்டிற்கு மேலாக அரசுத்தலைவரின்றி இருக்கும் லெபனான் நாட்டின் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டும் என அனைவரும் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் Beshara Rai

இஞ்ஞாயிறு திருப்பலியில் இந்த அழைப்பை முன்வைத்த லெபனான்  மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் Beshara Rai, மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதி திரும்பவும், அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப வழிபிறக்கவும் அனைவரும் செபிக்குமாறும் வேண்டினார்.

ஒரு கிறிஸ்தவருக்குரிய இந்த அரசுத்தலைவர் பதவி, பல்வேறு குழுக்களிடையேயான கருத்துவேறுபாடுகளால் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நிரப்பப்படாமலேயே இருந்துவருகிறது.

லெபனன் அரசியல் ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டு அரசுத்தலைவர் பதவி ஒரு கிறிஸ்தவருக்கும், பிரதமர் பதவி சுன்னி முஸ்லிம் மதத்தவருக்கும், பாராளுமன்ற சபாநாயகர் பதவி ஷியா முஸ்லிமுக்கும் என வழங்கப்படுகிறது.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.