2015-07-17 16:52:00

2014ம் ஆண்டின் திருப்பீட, வத்திக்கான் நகர நாட்டின் நிதி நிலை


ஜூலை,17,2015. 2014ம் ஆண்டில் திருப்பீடத்தின் வரவு செலவு நிதி நிலைமையில் பற்றாக்குறை காட்டப்பட்டாலும், வத்திக்கான் நகர நாட்டின் நிதி நிலைமையில்  கையிருப்பு காட்டப்பட்டுள்ளது.

திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நகர நாட்டின் நிதி நிலவரம் குறித்து இப்புதனன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில், 2014ம் ஆண்டு, புதிய நிதி நிர்வாகக் கொள்கைகளுக்கு மாறிய ஆண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பீட பொருளாதாரச் செயலகத் தலைவர் கர்தினால் ஜார்ஜ் பெல் மற்றும் அச்செயலக உறுப்பினர்கள், ஜூலை 14, இச்செவ்வாயன்று நடைபெற்ற பொருளாதாரக் கூட்டத்தில் இவ்வறிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.

திருப்பீடத்தின் வரவு செலவு நிதி நிலைமையில் 2 கோடியே 56 இலட்சம் யூரோக்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வத்திக்கான் அருங்காட்சியகம், வத்திக்கான் தபால் நிலையம், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய வத்திக்கான் நகர நாட்டின் நிதி நிலைமையில், செலவு போக, 6 கோடியே 35 இலட்சம் யூரோக்கள் கையிருப்பு காட்டப்பட்டுள்ளது.

நிதி நிர்வாகத்தில் புதிய கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுவதில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், 64 திருப்பீட நிறுவனங்களிலுள்ள 2,880 பணியாளர்க்கு ஊதியம் வழங்குவது திருப்பீடத்தின் செலவுகளில் மிக அதிகமாக உள்ளது எனவும் அவ்வறிக்கைகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.