2015-07-14 15:45:00

Laudato si’ சமுதாயத்தின் விளிம்புகளுக்கு வழங்கப்பட வேண்டும்


ஜூலை,14,2015. பிறரால் மாசுபடுத்தப்பட்ட இவ்வுலகில் வறுமையும், வறுமையில் வாழும் நிலைகளும் அதிகரித்திருப்பதால், Laudato si’ திருமடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பரிந்துரைத்துள்ள கூறுகள், சமுதாயத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் புதிய தலைவராகிய, பிலிப்பைன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் காரித்தாஸ் நிறுவன உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள மடலில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இயற்கையியல் சார்ந்த பிரச்சனைகள் களையப்படுவதற்கு, தலத்திருஅவைகள் பல ஆண்டுகளாக அழைப்பு விடுத்து வருகின்றன என்றும், இறைவா உமக்கே புகழ் திருமடலில் திருத்தந்தை வலியுறுத்தியுள்ள கருத்துக்களை திருஅவைத் தலைவர்கள், சிறப்பாக, காரித்தாஸ் நிறுவன ஆயர்கள் செயல்படுத்த வேண்டுமென்றும் கர்தினாலின் மடல் கூறுகின்றது.

ஒருங்கிணைந்த இறையியல் கிறிஸ்தவ ஆன்மீகத்தை திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார், கிறிஸ்தவர்கள் இயற்கையின் அழகைப் போற்றித் தியானிக்க வேண்டுமென்றும் மனிலா கர்தினால் தாக்லே அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.